சீழ் பிடிப்பதால் 5ல் ஒருவர் இறப்பதாக அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் சீழ் பிடிப்பதால் இறப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு, உலக அளவில் 4 கோடியே 90 லட்சம் பேருக்கு சீழ் பிடித்ததாகவும், இவர்களில் 1 கோடியே 10 லட்சம் பேர் மரணம் அடைந்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

முன்னதாக ஒரு ஆய்வில் சீழ் பிடிப்பதால் 50 லட்சம் பேர் இறப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், அது தவறு என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. புற்றுநோயால் இறப்போரைக் காட்டிலும் சீழ் பிடிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைந்து உயிரிழப்போர் அதிகம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புற்றுநோயால் ஆண்டுக்கு 96 லட்சம் பேர் மட்டுமே இறப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் இன்னொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது சீழ் பிடிப்பதால் இறப்போரில் பெரும்பகுதியினர் குழந்தைகள் என்றும், அவர்களிலும் பெரும்பகுதியோர் புதிதாக பிறந்த குழந்தைகள் என்றும் கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال