மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கொரியா தமிழர் சகாய டர்சியூஸ் பரிசு பெற்றார்.
இது குறித்து சகாய டர்சியூஸ் கூறியது…
மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் கலந்து கொண்டு, பயிலரங்கம் 2.0 -ன் முடிவில் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு பாட்டு எழுதும் போட்டியில் நானும் ஓர் வெற்றியாளன் என்பதால், அதன் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் தோழர் இளமாறன் நாகலிங்கம் அவர்களிடம் இருந்து அழைப்பு பெற்றேன். மலேசியாவின் உப்சி பல்கலைக்கழகத்தில் மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் மற்றும் உப்சி வளர்மன்றம் இணைந்து ஏற்படு செய்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த
எழுத்தாளர்,
கதாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர்,
இசையமைப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட அன்பு அண்ணன் Yuwa Ji அவர்களை சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியாகவும் மனதிற்கு
நிறைவாகவும் இருந்தது.
மேலும் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்கு, அகிலம் நீ,
இயல் மன்றம் போன்ற அமைப்புகளின் வழி நின்று, கலை
இலக்கியம், கதை, கவிதை, பாடல் எழுதும் திறன்களை இளையோருக்கு பயிற்றுவிக்க பல முயற்சிகளை எடுத்து
அதில் வெற்றி கண்டு வரும் அன்புத் தோழமை Pon Kogilam அவர்களை சந்தித்து உரையாடியது மறக்க முடியாத தருணம்,
மேலும் போட்டியின் சக வெற்றியாளர்கள் Vikneswary Maniam,Ramana Devi Ananthan
ஆகியோரையும் சந்தித்தது மிகச் சிறப்பாக இருந்தது.
நிகழ்ச்சியினை அழகாய் வடிவமைத்து ஒருங்கிணைத்த வளர்மன்றம்
குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.
எனது மலேசிய பயணத்தில் உடனிருந்து பல உதவிகளைச்செய்து பயணம் இனிதாக அமைய உறுதுணையாக இருந்த தோழமை பொன்கோகிலம் மற்றும் சகோ இளமாறன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி!
இவ்வாறு அவர் கூறினார்.