ஆணிவேரில் அடித்த வி.பி.சிங் - விஜய் கார்த்திக்



எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகவாதி அரசியலார்கள் உருவாவது கடினம்.
அப்படியே ஒரு ஜனநாயகவாதி அரசியலார் உருவானாலும் நாட்டு மக்களை அவர் கைப்பற்றும் முன்பு அவரை ஊடகவியல்,வாணிப கோமான்கள் விடுவதில்லை.
நாம் நிரம்ப பேர் அத்வானியை பீகாரில் தூக்கியதாலேதான் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது என நினைக்கிறோம்.
அதுவும் ஓர் காரணிதான்.
வி.பி.சிங் அரசின் ஒரு கால் பாஜக.
இன்னோர் கால் கம்யூனிஸ்ட்கள்.
அம்பானி,கிர்லோசாகர் ரெய்டுகளின் ஆத்திரம் அடங்குமா என்ன?
"மண்டல்" கமிசன் பரிந்துரை வந்ததே வந்தது.
ஒரு காலான பாஜக "கமண்டல்" என வடநாடு முழுவதும் பிரசங்கம் எனும் பெயரிலே பிரச்சினைகளை மேற் கொண்டார்கள்.
மற்றோர் காலான கம்யூனிஸ்ட்கள் சுண்டல் விற்கின்ற பிராமணாளும் இருக்கிறாளே என பொருளாதார இட ஒதுக்கீடு கேட்டாளே.
ஆக பிரச்சினை மண்டல்-கமண்டல்-சுண்டல்..
ஓர் அரசை கவிழ்ப்பதற்கு பெருமளவில் செல்வம் தேவை.
அந்தச் செல்வத்தைக் கொண்டே அரசுகள் ஆயிர ஆயிரமாண்டுகளாக கலைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் 1991ல் ஒர் அரசு கவிழ்க்கப் பட்டது.
கவிழ்க்கப்பட்டதோ ஜனநாயகவாதியின்,சமத்துவ வாதியின்,சகோதரத்துவ வாதியின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு.
இந்த இடத்தில்தான் இந்தியாவி அரசியலமைப்புச் சட்டத்தின் முகத்தின் மீது பேராசான் அம்பேத்கர் எழுதிய ரூசோவின் கருத்துக்களான " சுதந்திரம் -சமத்துவம்-சகோதரத்துவம் " மலரும் முன்பே மடிந்து வீழ்ந்தது.
ஒரு நாட்டின் சரிபகுதியான வட இந்தியாவில் காஷ்மீரை காட்டி அரசியல் நடக்கின்றது.
அதனையும் மீறி கல்வி வேலை வாய்ப்பைப் பற்றி பேசினாரேயொழிய ஒரு முறை கூட காஷ்மீரத்தை,அண்டை நாட்டினரை காட்டி அரசியல் செய்யாத மாண்பாளர் சமூக நீதிக் காவலர்.
அவர் ஆட்சி தொடர்ந்து இருந்தால் இந்தியாவை ருஷ்யா போல மாற்றியிருப்பார்கள்.
ஜார் நிக்கோலஸ் அரசை போல அல்ல?
லெனின் அரசை போல்!
ஒரு நாளும் கூட அவர் முதலாளித்துவத்திற்கு ஆதரவானவர் அல்ல.
" அந்த சிரிப்பிலே நீ சொக்குகிறாய்,அது சிலந்தியின் மொழி!
வலை வீசும் சாகசம்!
அதைக்கண்டு நீ ஏமாறுகிறாய்.உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடி வருடுகிறாய்.
உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய்.
உன் பண்பை பாழாக்கிய பார்வையை நீ பாகு என்று பகருகிறாய்!
அந்த மேனியின் பளபளப்பு வெறும் மேல் பூச்சு.
அந்த புன்னகை முகத்தாளின் மனம் ஒரு எரிமலை,அவள் ஒரு நடமாடும் நாசம். உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்,உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம் என்பார் பேரறிஞர் அண்ணா ஆரிய மாயையிலே! "
இந்தியர்களை இந்த ஊடகங்களும்,முதலாளிகளும் தான் ஆரிய மாயையிலே சிக்க வைக்கிறார்கள்,
அந்த இடத்தின் ஆணிவேரில் அடித்தவர்தான் வி.பி.சிங்..
ஆமாங்க ஒட்டு மொத்த இந்தியாவில் எல்லோரும் படிக்கனும்,முன்னேறனும்னு நினைத்து கல்வி,வேலை வாய்ப்பிலே முதல் போரைத் தொடங்கிய மன்னர் அவர்.
அவருக்கு முன்பு தமிழ் நாட்டிற்கு வெளியே சத்ரபதி சாகு மகராஜூம்,மைசூர் சாமராஜ உடையாரும் தங்களுடைய சமஸ்தானங்களில் சமூக நீதியை உருவாக்கியவர்கள்.
வாழ்க சமூகநீதிக் காவலர்!

Previous Post Next Post

نموذج الاتصال