இதயம் பேசும் காதலின் கவிதைகள்! - சகாய டர்சியூஸ் பீ

அலைபேசியின் இயக்கத்தில்
ஒளிரும் திரைப்பிடிப்பில்
உருவாகும்
ஒரு நவீன காதல் கதை!
முகநூலில் முடிவற்ற
அரட்டைகள்
இன்ஸ்டாவின் பகிர்வுகள்
இருமனங்களின் திறவுகோல்!
மெல்லிய நீரோடையாய்
வழிந் தோடும்
குறுஞ் செய்திகள்
உறவின் இணைப்புகள்!
ஸ்னாப்ச்சாட் பேஸ்டைம் வாட்ஸ்அப்
இணைய சுவர்களைத்
தாண்டி வீசியது
அலைக்கற்றையில் காதல்!
நெய்யப்பட்ட கனவுகள்
சிரிப்புகள் ரகசியங்கள் பகிர
வளர்கிறது மெய்நிகரில்
ஓர் அழகிய காதல்!
ஒவ்வொரு அழைப்பும்
ஒவ்வொரு உரையும்
இதயம் பேசும்
காதலின் கவிதைகள்!
ஈமோஜிகள் ஜிஃப்கள்
திரையில் பதியும் இருஉதடுகள்
உணர்வுகள் பரிமாற
உள்ளங்கள் பிணைந்தன!
தூரம் நெருப்பாக
துவளாத இதயங்கள்
இறுதியில் இணைந்தன
இணைய உலகில்
அலைபேசியின் இயக்கத்தில்..!
Previous Post Next Post

نموذج الاتصال