விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 2 - ஆதனூர் சோழன்

ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி

 (1888-1982)

ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி, அரசியலில் நல்லொழுக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் முதுகலைப்பட்டபடிப்பை முடித்த அவர், பீஹாரில் உள்ள முசாபர்பூரில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1919ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறை பேராசிரிய ராக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத் பல்கலைகழகத்தில் பணியாற்றியபோது, ஆச்சாரியா என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

1917ல் இந்திய சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். 1920ல் முதல்முறையாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் 1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 18 மாதகாலம் சிறைவாசம் அனுபவித்தார். இதைத் தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றபோதுக மூன்றாண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1951ல் விவசாயத்தொழிலாளர்கள் தளம் என்ற அமைப்பினை (கிசான் மஸ்தூர் தள்) உருவாக்கினார். தனது தொடர்ச்சியான மற்றும் உறுதியான அரசியல் நடவடிக் கைகளால் 1946ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கிருபளானி உயர்ந்தார். காந்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான ஜெ.பி. கிருபளானி 1982ல் தனது 94வது வயதில் மறைந்தார்.


Acharya J.B. Kripalani was an ardent politician who had an extreme faith in the moral code of conduct in politics. He was born at Hyderabad (Pakistan) in a Sindhi family. He completed his post graduation from Bombay and later on became a lecturer of History in Muzzaffarpur, Bihar. In 1919, he was appointed as the Professor of Political Science in Benaras University. He was conferred the title of ‘Acharya’ when he was in Gujarat University.

In 1917, he associated himself with the ongoing Indian freedom movement. He was jailed for the first time in 1920 and for 18 months in 1930 during ‘Salt Satyagraha’. During the Quit India Movement he was again jailed for three years.

In 1951, Kripalani founded the ‘Kisan Mazdoor Dal’. By dint of his sheer ability and political acumen, he became the President of the Congress Party in 1946. J.B. Kripalani, a follower Gandhi, died in 1982 at the age of 94.

Previous Post Next Post

نموذج الاتصال