ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் - ஆதனூர் சோழன்


ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். கணிதவியலிலும் தலைசிறந்து விளங்கினார். மின்சாரம் மற்றும் காந்தவிசை தொடர்பான ஏராளமான சமன்பாடுகளையும், சோதனைகளையும், கணிப்புகளையும் ஒருங்கிணைத்து நிலையான மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவரைப் பற்றிய சில தகவல்களை அறிந்துகொள்வோம்...

 * ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1831 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார் ஜேம்ஸ் மேக்ஸ்வெல். 1879 ஆம் ஆண்டு நவம்பர் மாத் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என்று அழைக்கப்படும், இவருடைய சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகள்தான் என்பதை விளக்கின. அதாவது ஒளி என்பது மின்காந்த அலை என்றார். இதைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முந்தைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்களாக மாறின.

 * ‘வேகத்தின் இயற்பியல் பாதை‘, ‘மின்காந்தத் துறையின் ஒரு சிறந்த விதி‘ ‘மின்சாரம் மற்றும் காந்தத் தன்மைகள்‘ (ஏ டிரீட்டைஸ் ஆன் எலக்ட்ரிசிட்டி அண்ட் மேக்னட்டிஸிசம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் அவரது சிறந்த பணியை எடுத்துக்காட்டின.

* மேக்ஸ்வெல்லின் ஆய்வுகள், 20ஆம் நூற்றாண்டில் இயற்பியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. அவரது பணிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை வெகுவாக கவர்ந்தது. 

* எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் 1847ஆம் ஆண்டு முதல் 1850ஆம் ஆண்டுவரை படித்தார். தனது வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில் வீட்டிலிருந்தபடியே படித்துக் கொண்டும், பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டும் வந்தார். 

*எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்தபிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1850 முதல் 1856 வரை படித்தார். இதைத் தொடர்ந்து தனது கணிதத் திறமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். 1856 இல் அபர்தீன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார்.

* சனி வளையத்தின் நிலைத்தன்மை என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரைக்கு 1859 ஆம் ஆண்டு பரிசு பெற்றார் மேக்ஸ்வெல். அந்தக் கட்டுரையில், சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையம், தடிமனான அல்லது திரவ வளையத்துக்குப் பதிலாக பல்வேறு சிறிய பொருட்களால் ஆனது என்று குறிப்பிட்டிருந்தார். 

* மேக்ஸ்வெல்லின் பெரும்பாலான ஆய்வுகள், மைக்கேல் ஃபாரடேவைப் பின்பற்றியே அமைந்திருந்தன. ஃபாரடேவைவிட மேக்ஸ்வெல் 40 வயது இளையவர். பல்வேறு சமயங்களில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

* நிற மாறுபாடுகள், கைனெட்டிக் கோட்பாடு, தெர்மோடைனமிக் ஆகிய துறைகளிலும் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். முதன்முறையாக உண்மையான வண்ண புகைப்படத்தை எடுத்த பெருமை மேக்ஸ்வெல்லையே சேரும்.

* மேக்ஸ்வெல்லின் கருத்துக்களில்... 

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் காலை 6 மணிக்கு வழிபாட்டுக்கு வர வேண்டும் என்பதை கட்டாயமாக்கிய சமயத்தில், “நான் தாமதமாக வந்தால் அதற்கு காரணம் இருக்கிறது” என்று கூறினார்.

* அறிவின் ஒவ்வொரு பிரிவிலும், உண்மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைக்காட்டிலும் குறைவான அளவே முன்னேற்றம் இருக்கிறது. அவற்றை உருப்படியாக கட்டுவதற்கு தேவையான தகவல்கள் முக்கியமானவை.


Previous Post Next Post

نموذج الاتصال