ஆர்க்கிமிடிஸ் - ஆதனூர் சோழன்




கி.மு. 287-212 காலகட்டத்தில் கிரீஸில் வாழ்ந்தவர் ஆர்க்கிமிடிஸ். இவர், மிகப்பெரிய கணிதவியலாளர், இயற்பிய லாளர், கண்டுபிடிப்பாளராக கருதப்படுகிறார்.  வடிவக் கணிதம் (ஜியோமெட்ரி) (வட்டம், கோளம்), இயற்பியல், இயந்திரவியல், ஹைட்ரோஸ்டேட்டிக்ஸ் ஆகியவற்றில் ஆர்க்கிமிடிஸின் கண்டுபிடிப்புகள் பிரபலமானவை. கிரீஸின் ஸ்ராகஸ் நகரில் அரச குடும்பத்துக்கு நெருங்கிய நபராக வாழ்ந்தார். அவரது வாழ்க்கையைப் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம்... 

அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு கதைகள் பிரபலமாக கூறப்படுகின்றன. 

முதல் கதை. 

இரண்டாம் ஹியரோ மன்னன் ஆர்க்கிமிடிஸை அழைத்தார். அவரிடம், தான் அணிந்துள்ள கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டதா, அல்லது வெள்ளி கலக்கப்பட்டதா என்பதை அறியுமாறு  கேட்டு கொண்டார்.

இதற்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியாமல், ஆர்க்கிமிடிஸ் குழப்பத்தில் இருந்தார். ஒரு நாள், குளியல் தொட்டியில் இறங்கிய போது தொட்டியிலிருந்து நீர் நிரம்பி வழிவதைக் கண்டார். தண்ணீரில் மூழ்கும் பொருளின் எடைக்கு தகுந்த அளவு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் என்பதை அறிந்தார். 

இந்த உண்மையை அறிந்தவுடன் குளியல் தொட்டியில் இருந்து துள்ளிக் குதித்தார். குளியல் அறையிலிருந்து உடலில் ஆடை அணியாமல், வெளியே ஓடி வந்து ‘யுரேகா‘ என்று கத்தினார். யுரேகா என்றால், “நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள். ஹியரோவின் கிரீடத்தையும், அதே எடை கொண்ட சுத்தத் தங்கத்தையும் நீர் நிரம்பிய பாத்திரத்தில் மூழ்கச்செய்து வெளியேறும் தண்ணீரின் அளவை அறிந்தார். சுத்தமான தங்கம் வெளியேற்றி தண்ணீரின் அளவு அதிகமாக இருந்தது. 

இதையடுத்து, மன்னரின் கிரீடம் வெள்ளி அல்லது வேறு எடைகுறைந்த உலோகம் கலந்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் ஆர்க்கிமிடிஸ்.

மற்றொரு கதை.

சம்பவத்தில், நெம்புகோலின் தத்துவத்தை விளக்குமாறு ஆர்க்கிமிடிஸிடம் மன்னர் ஹியரோ கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த ஆர்க்கிமிடிஸ்,

“நான் நிற்பதற்கு ஒரு இடத்தை தாருங்கள், நெம்புகோலால் நான் பூமியையே நகர்த்திக் காட்டுகிறேன்” என்று கூறினாராம்.

இரண்டாம் பியூனிக் யுத்தத்தின்போது, தனது நாட்டுக்காக புதிய யுத்தத் தளவாடங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். கிரீஸ் நகரை, சிராகியூஸ் முற்றுகையிட்ட சமயத்தில் இவர் கண்டுபிடித்த ஆயுதங்கள்தான் எதிரிகளிடமிருந்து கிரீஸை மூன்று ஆண்டுகள் வரை முற்றுகையை தாக்குப்பிடிக்கச் செய்தன. பிறகு கிரீஸ் நகரம் சிராகியூஸிடம் வீழ்ந்தது. அப்போது, இவரை மட்டும் உயிரோடு விட்டுவைக்கும்படி தளபதி உத்தரவிட்டான். ஆனாலும் ஆர்க்கிமிடீஸ் கொல்லப்பட்டார்.

Previous Post Next Post

نموذج الاتصال