முடமாகிக்கிடக்கும் தமிழகத்தை செயல்படுத்த பொறுப்பேற்கும் செயல்தலைவர்! - ஆதனூர் சோழன்



கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசு வெறும் காணொளிக் காட்சியாக நடைபெற்றதைப் பார்த்தோம்.

இப்போது, ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், தங்களை ஆட்சி செய்வது யாரென்றே தெரியாமல் தமிழக மக்கள் திண்டாடிக் கிடக்கிறார்கள்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை மோடி அரசாங்கத்தின் உதவியால் அதிமுக தட்டிப்பறித்தது. அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை இது.

தளபதி ஸ்டாலின் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக திமுக மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றும் நிலைக்கு உருவாகியது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை முன்னும் பின்னுமாக போய்க்கொண்டிருந்த நிலையில், அதிமுகவின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக பிரதமராக இருக்கும் மோடி கூறினார்.

அப்போதிருந்து திமுகவுக்கு சாதகமான வாக்குகள் திசைமாற்றப்பட்டன. அல்லது, எண்ணாமல் புறக்கணிக்கப்பட்டன.

மொத்தமாக வெறும் ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வெற்றி தடுக்கப்பட்டது. மொத்தமாக அதிமுகவைக் காட்டிலும் வெறும் இரண்டரை லட்சம் வாக்குகள் மட்டுமே திமுக குறைவாக பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற தில்லுமுல்லுகளையும் ஏற்று திமுகவை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக அமரச் செய்தார் தளபதி அவர்கள்.

இதுபோன்ற மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் என்று நினைத்தே பார்க்காத ஜெயலலிதா நொந்துபோனார் என்பதே நிஜம். சட்டமன்றத்தில் அவருடைய நடவடிக்கைகள் அப்படித்தான் இருந்தன. எம்எல்ஏக்கள் கூட்டத்தில்கூட உள்ளாட்சித் தேர்தலில் இதுபோல திமுக வெற்றிபெற்றால் தன்னால் தாங்க முடியாது என்று ஜெயலலிதா புலம்பியதாக செய்திகள் வெளிவந்தன.

ஒரு ரோபோ போலவே ஜெயலலிதா சட்டப்பேரவைக்கு வந்தார். அவரால் நடக்கவோ, நீண்ட நேரம் நிற்கவோ முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் சர்க்கரை நோய் காரணமாக அவருடைய இரண்டு கால்களும் எடுக்கப்பட்டதும்தான் என்று அரசல்புரசலாக கூறப்பட்டது.

ஆனாலும், தளபதி ஸ்டாலின் அவர்கள் ஜெயலலிதாவின் அடாவடி அரசியலை தாங்கி அவருக்கு சற்று விட்டுக்கொடுத்தே சட்டமன்றக் கடமைகளை ஆற்றியதாக அரசியல் பார்வையாளர்கள் குறைகூறினார்கள்.

அதையும் பொருட்படுத்தாமல் தளபதி தமிழகத்தின் நலன்கருதி தனது பணிகளில் கவனத்தை செலுத்தினார்.

இந்த நிலையில்தான், முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

அதன்பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். ஜெயலலிதாவை காட்டாமலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு என்ன சிகிச்சை என்பதுகூட சொல்லப்படவில்லை. கடைசியாக  செயற்கை சுவாச சிகிச்சை என்று சொன்னார்கள். அவர் சாப்பிடுவாதக சொன்னார்கள். விரைவில் வீடு திரும்புவார் என்று தஞ்சை அரவாக்குறிச்சி தேர்தல் சமயத்தில் சொன்னார்கள். கைநாட்டு வைத்தவர், கையெழுத்து போடும் அளவுக்கு தேறியதாக சொன்னார்கள்.

திடீரென்று மாரடைப்பில் காலமானார் என்றார்கள்.

அவருடைய உடல் அடக்கம் நடைபெற்று முடிந்த 7 நாட்களிலேயே, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு, அந்தக் கட்சி இனிமேல் தேறுமா என்ற நிலைமை உருவாகி இருக்கிறது.


ஆனால், அதேசமயத்தில், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தனது 93 வயதில் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று சுகமடைந்து, ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் தெரிவித்த யோசனையின் காரணமாக வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை உருவாகியது.

அதன்பேரில், திமுக பொருளாளராக தமிழகம் முழுவதும் சுற்றிவந்து கழகத்தின் வெற்றிக்காக கலைஞரின் வழியில் ஓய்வின்றி உழைக்கும் தளபதி அவர்களை கழகப் பொதுக்குழு கழகத்தின் செயல்தலைவராக நியமித்தது.

இதோ, கழகம் தனது நான்காம் தலைமுறைத் தலவரின் தலைமையின் கீழ் வீறுநடைபோடத் தொடங்கியிருக்கிறது.

இனி, திராவிட இயக்கத்தின் தலைமகனாய் கழகம் தனது பாரம்பரிய வீரத்துடன் துணிச்சலாக தொடர்ந்து தனது போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெறும்!

(2017ல் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்ட சமயத்தில் எழுதப்பட்டது)


Previous Post Next Post

نموذج الاتصال