நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் - ஆதனூர் சோழன்

 


திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்... இப்போதும் பேசுகிறார்கள்...

கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்...
அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்...
படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்...
இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு நல்லது...
திராவிட இயக்கத்தினர் என்றுமே தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுக் கொடுப்பதில்லை...
அப்படி விட்டுக்கொடுப்போர் யார் என்று பகுத்தறிந்தால் வேறுபாடு புரியும்...
தென்னிந்தியா என்பது வட இந்தியாவோடு இணையவே முடியாத பண்பாடு, கலாச்சாரத்தை கொண்ட பகுதி என்பதில் திமுக தலைவர்கள் எப்போதுமே உறுதியாக இருக்கிறார்கள்...
மற்ற தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கக் கோட்பாடுகளே இந்தியாவுக்கு பொருத்தமானவை என்பதை விரைவில் இந்தியா உணரும் காலம் நெருங்குகிறது...
1924வரை காங்கிரஸுக்குள் இருந்து தந்தை பெரியார் வலியுறுத்திய கோட்பாடுகள் இப்போது இந்தியா முழுவதும் பரவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது...
திமுகவின் வளர்ச்சியை வெறுமனே ஊழல் புகார்களால் மட்டும் தடுத்துவிடலாம் என்று காலம் காலமாக முயற்சிக்கிறார்கள்...
ஆனால், திமுக வழக்குகளைச் சந்திக்க தயங்கிய வரலாறு இல்லை... வழக்குகளை வாய்தா வாங்காமல் நடத்தவே திமுக கூறி வந்திருக்கிறது...
சர்க்காரியா கமிஷன் விசாரணையில் திமுக மீது புகார் கொடுத்த எம்ஜியார் தனக்கு அந்த புகார்கள் குறித்து எதுவும் தெரியாது என்று ஓடியதே வரலாறு...
போதுமான ஆதாரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று காத்திருந்தது வீணாகிவிட்டது என்று 2ஜி வழக்கை தள்ளுபடி செய்ததே வரலாறு...
ஆனாலும், இத்துப்போன அந்த வழக்குகளையே தூக்கிச் சுமந்து திமுகவை குறைகூறுவது எதிரிகளின் வரலாறு...
இன்றும்கூட வெறும் புகார்களின் அடிப்படையிலேயே ஒருவரை வீம்புக்காக ஜாமீன் மறுத்து ஒரு ஆண்டாக தடா, பொடா மாதிரி சிறைக்குள் அடைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் எதிரிகள்...
எம்ஜியார் தொடங்கி, ஜெயலலிதா, எடப்பாடி வரை தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கவே தடை கோரி உச்சநீதிமன்றம் வரை செல்வதே வரலாறு...
விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வந்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்கிக் காலம் கடத்துவதே இவர்களுடைய வாடிக்கை என்பதை வரலாறு கூறுகிறது...
ஆனால், எத்தனைதான் விளக்கம் கூறினாலும் தங்கள் பொய்யை தொடர்வதுதான் அவர்களுடைய ஒரே வேடிக்கை...
Previous Post Next Post

نموذج الاتصال