அன்பின் உருவமே, எம் ஆசிரியரே!அறியாமை இருளை அகற்றிய ஒளியே
கல்வி என்னும் கனியைத் தந்துகனவுகளை விதைத்த கருணையின் உருவே!
சிறகற்ற பறவைக்கு சிறகுகள் தந்தீர்
சிந்தனையின் உயரத்தில் சிறகடிக்க வைத்தீர்
தவறுகளை தண்டித்து திருத்தம் செய்தீர்
தளராத உழைப்பால் எம்மை உருவாக்கினீர்
தலைவணங்கி நிற்கிறோம் தாங்கள் முன்னே
தலைநிமிர்ந்து நடக்கிறோம் தாங்கள் தந்த ஞானத்தாலே
உம்அன்பின் ஆழத்தை அளக்கமுடியாது
உம்தியாகத்தின் உயரத்தை எட்டமுடியாது
கண்களில் நீர்மல்க கைகூப்பி வணங்குகிறோம்
காலம் முழுவதும் கனிவுடன் நெஞ்சில் ஏந்துகிறோம்
ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல உங்கள் மகத்துவம்
ஆயிரம் யுகங்களானாலும் அழியாது நிலைத்திருக்கும்!
எதிர்காலத் தலைமுறையை வடிவமைக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்!"