செத்த பல்லுக்கு பதிலாக வளரும் பல் - ஆதனூர் சோழன்


பல் போனால் சொல் போகும் என்பார்கள்.

ஆனால், பல் போனாலும் செயற்கை பல் கட்டி சொல்லைக் காப்பாற்ற முடிந்தது.

இப்போது ஆய்வுக் கூடத்திலேயே நமது பல்லை வளர்த்து, விழும் பற்களுக்குப் பதிலாக புதிய உயிருள்ள பல்லை பொருத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பொதுவாக சுறா, முதலை போன்ற பிராணிகளுக்கு பற்கள் கடைசிவரை தொடர்ந்து புதிதாக வளருகின்றன. 

ஆனால், மனிதர்களுக்கு ஆறு மாதங்களில் வளரத் தொடங்கும் பற்கள் 6 வயதில் ஒருமுறை விழுந்து விடுகின்றன. 6 வயதுவரை 20 பற்களும் பின்னர் 32 பற்களும் முளைக்கின்றன.

பல காரணங்களால் பற்கள் தேய்ந்து, சிதைந்து, அரிபட்டு பிடுங்கும்படி நேர்கின்றன. அவற்றுக்குப் பதிலாக புதிய பற்களை பொருத்த முடிந்தாலும், அவையும் ஒரு கட்டத்தில் தேய்ந்துவிடுகின்றன.

இப்போது ஆய்வுக்கூடத்தில் நமது பல்லுக்குரிய நுண்ணுயிரைக் கொண்டு புதிய பற்களை வளர்த்து, புதிதாக பொருத்த முடியும் என்றும், அந்த புதிய பற்கள், நமது தாடையுடன் புதிய வேர் விட்டு உயிர் பிடிக்கும் என்றும் புதிய ஆய்வு கூறுகிறது.

இனி, சொத்தைப் பல், உடைந்த பல், நொறுங்கிய பல் ஆகியவற்றை நோண்டி எடுத்து, எதையோ உள்ளே வைத்துப் பூசி, புதிய செயற்கைப் பற்களை பொருத்த வேண்டியதில்லை என்று லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர் ஸ்யூசென் ஸேங் தெரிவித்துள்ளார்..

Previous Post Next Post

نموذج الاتصال