கோத்ரா ரயில் எரிப்புக்கு புதிய ஆதாரம் - குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் அம்பலம்

2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி ரயில் பெட்டி எரிந்த சம்பவத்தின் போது, ​​ரயில்வே காவலர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றியிருந்தால், அந்த துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்ட குஜராத் உயர் நீதிமன்றம், கடமையில் தவறியதற்காக ஒன்பது ரயில்வே காவல்துறையினரின் பணிநீக்கத்தை உறுதி செய்துள்ளது..!


பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் - 

1. குலாப்சிங் தேவுசின் ஜாலா, 

2. குமான்சிங் ஜித்சிங் ரத்தோட், 

3. நதாபாய் துலாபாய் பாபி, 

4. வினோத்பாய் பிஜல்பாய், 

5. ஜாபிர் ஹுசைன் ரசூல் மியா ஷேக், 

6. ரசிக்பாய் ராஜாபாய் பர்மர், 

7. கிஷோர்பாய் தேவபாய் மோபாய் பர்மர், 

8. பாலுபாய் பட்பாய், 

9. பாபாய் பட்பாய். 


இரயில்வே போலீஸ் படையில் இருந்த மேற்படி 9 பேரும்... பிப்ரவரி 27, 2002 அன்று... தாஹோடில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸில் ஏறி அஹமதாபாத் செல்ல நியமிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக, மேற்படி 9 ரயில்வே காவலர்களும்... அவர்கள் இயக்கப் பதிவேட்டில் பொய்யான பதிவுகளைச் செய்துவிட்டு... மற்றொரு ரயிலான சாந்தி எக்ஸ்பிரஸ் மூலம் அகமதாபாத்துக்குத் திரும்பினர். மூன்று காவலர்கள் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அணிந்த ஆயுதக் காவலர்களாகவும், ஆறு பேர் சாதாரண உடையிலும் இருந்தனர்.


தாஹோத் ரயில்வே அவுட் போஸ்டில் உள்ள ரயில்வே பதிவேட்டில், சபர்மதி எக்ஸ்பிரஸ்  மூலம் புறப்படுவதாக அவர்கள் அனைவரும் பதிவு செய்துள்ளனர். தாஹோத் ரயில் நிலையத்தில் உள்ள தாஹோத் பதிவேட்டில், சாந்தி எக்ஸ்பிரஸில் புறப்படுவதாக எந்த பதிவும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


மனுதாரர்கள் காலை 5:21 மணிக்கு தாஹோத்தில் இருந்து அஹமதாபாத்திற்கு சாந்தி எக்ஸ்பிரஸில் ஏறினார்கள். அஹமதாபாத்தை அடைந்த பிறகு, மனுதாரர்கள் காலை 10:05 மணிக்கு ரயில் நிலைய நாட்குறிப்பில், சாந்தி எக்ஸ்பிரஸ் ரயில் அஹமதாபாத்தை 'பாதுகாப்பாக' வந்து அடைந்ததாகப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பணி  நியமிக்கப்பட்ட ரயிலைத் தவிர்த்து வேறு ரயிலில் தாஹோட்டில் எறியதற்கோ... அஹமதாபாத்திற்கு வந்து இறங்கியதற்கோ... எந்த காரணமோ அல்லது நியாயமோ அதில் குறிப்பிடப்படவில்லை.


"அந்த ஆயுத காவலர்கள் தங்களுக்கு கட்டளை இடப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அஹமதாபாத்தை வந்து அடைந்திருந்தால், கோத்ராவில் நடந்த சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. மனுதாரர்கள் தங்கள் கடமையில் அலட்சியத்தையும் கவனக்குறைவையும் காட்டியுள்ளனர். கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களை சேவையிலிருந்து நீக்கியது நியாயமானது" என்று நீதிமன்றம் முடிவு செய்தது.


சபர்மதி எக்ஸ்பிரஸ் காலை 07:35 மணிக்கு கோத்ரா ரயில் நிலையத்தை அடைந்தது. கோத்ரா ரயில் நிலையத்தில் சங்கிலி இழுத்தல், ரயிலின் பெட்டி-S6 தீப்பிடித்தது போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் 59 பேர் தீயில் எரிந்து சம்பவம், இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் வன்முறையான வகுப்புவாத கலவரங்களில் ஒன்றை குஜராத் மாநிலத்தில் தூண்டியது. இந்த ரயில்வே காவலர்கள் 9 பேரும் தங்கள் கடமையைச் சரியாக செய்திருந்தால், அவர்கள் அங்கு கோத்ராவில் சபர்மதி ரயிலில் இருந்திருந்தால் அன்றைய நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.


ஒழுங்கு விசாரணையின்படி, மனுதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியைக் கைவிட்டது, கடமைப் பதிவேட்டில் தவறு செய்தல் மற்றும் அவர்கள் அழைத்துச் செல்ல வேண்டிய ரயிலில் பயணிக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணை அதிகாரி இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கண்டறிந்தார், இதன் விளைவாக 2005 இல் அவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். மேல்முறையீட்டு ஆணையத்தில் அவர்கள் செய்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது, இதனால் அவர்கள் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது.


தீர்ப்பை வழங்கிய நீதிபதி வைபவி டி நானாவதி, ரயில் 'ஏ' வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.


சங்கிலி பறிப்பு, வாக்குவாதம், அடிதடி தகராறு போன்ற அசம்பாவித சம்பவங்கள் அடிக்கடி நிகழும் ரயில்கள் 'ஏ' வகையாகும். சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, அத்தகைய ரயில்களில், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் குறைந்தது 3 ஆயுதம் ஏந்திய போலீசார் இருக்க வேண்டும், மீதமுள்ள ஏ.எஸ்.ஐ.க்களுக்கு லத்திகள் மற்றும் சாட்டைக் கயிறுகள் வழங்கப்பட வேண்டும், கூடுதலாக, சாதாரண உடையில் உள்ள காவல்துறை அதிகாரிகளும் ரயிலில் ரோந்து செல்ல வேண்டும்.


விசாரணை அதிகாரி தனது அறிக்கையில், "இந்தக் குற்றத்தை நான் விசாரித்தேன். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. சபர்மதி ரயிலில் நகரும் படையின் ஊழியர்கள் இருந்திருநதால், அவர்கள் ரயில் பெட்டியில் சங்கிலி இழுத்தல் பற்றி அறிந்திருக்கலாம். மேலும் அவர்கள் ரயிலில் இருந்ருந்தால், காவலாளி அல்லது இயந்திர ஓட்டுநருக்கு வாக்கி-டாக்கி மூலம் தொடர்புகொள்வதன் மூலம் ஆதரவு, அதாவது பந்தோபஸ்த்து ஏற்பாடு செய்திருக்கலாம். இதன் மூலம் குற்றத்தை முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை நிச்சயமாக தடுத்து பலரை காப்பாற்றி இருந்திருக்கலாம். எனவே, அசம்பாவிதத்துக்கு இவர்களும் ஓரளவுக்கு பொறுப்பாவார்கள். சதி வெற்றி பெற்றிருந்தால், அவர்கள் இருந்திருந்தாலும் கூட, குறைந்தபட்சம் இவ்வளவு பெரிய அளவிலான உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டிருக்காது. மேலும், படையின் ஊழியர்கள் அந்நேரம் அந்த ரயிலில் இருந்திருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒன்று அல்லது இரண்டு பேரையாவது உடனடியாகப் பிடித்திருக்கலாம். சம்பவம் எப்படி நடந்தது என்பதற்கு நேரில் கண்ட சாட்சியாகவாவது இருந்திருக்கலாம்" என்று கூறினார். 


"மனுதாரர்கள், (9 காவலர்கள்) இவ்வளவு முக்கியமான பணி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டாலும், ஒதுக்கப்பட்ட சபர்மதி  ரயிலில் பயணிக்காமல்... சாந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்வதுதான் பொருத்தமானது என்று சாதாரணமாக நினைத்திருக்கிறார்கள்," என்று நீதிமன்றம் குறிப்பிட்டது, மனுதாரர்களின் பணிநீக்கத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட காரணங்கள் எந்த தலையீட்டையும் கோரவில்லை என்று கூறியது.


இந்த நீதிமன்றத்தின் கருத்துப்படி, மனுதாரர்கள் (9காவலர்கள்) தாஹோத் ரயில் நிலையத்தில் தவறான பதிவை இயக்க பதிவேட்டில் செய்திருப்பதை மனுதாரர்களே ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளனர். மனுதாரர்களுக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணி ஒதுக்கப்பட்டது, இருப்பினும், சாந்தி எக்ஸ்பிரஸில் ஏறினார்கள். அத்தகைய பணியை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது ரயில் மாறுவதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பது சரியென  மனுதாரர்கள் நினைத்தனர். இங்குள்ள மனுதாரர்கள் காவல் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமையின்படி செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவ்வாறு செய்யத் தவறியதால், தகுதிவாய்ந்த அதிகாரி மனுதாரர்கள் மீது "சேவையிலிருந்து நீக்குதல் " என்ற தண்டனையை விதித்தார். மனுதாரர்கள் தங்கள் கடமையில் அலட்சியத்தையும் கவனக்குறைவையும் காட்டியுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.  ஆகவே, மனுதாரர்களை ரயில்வே காவலர் சேவையிலிருந்து நீக்கியது நியாயமானதுதான்" என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

Previous Post Next Post

نموذج الاتصال