முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையில் பெரியார் பேச்சுக்கு மரியாதை தருவார், அவரது பேச்சைக்கேட்டு ராஜாஜி மூடிய 9400 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார் என்கிற ஒரே காரணத்திற்காகவே...
எதிரணியாக இருந்தபோதும், குடியாத்தம் தொகுதியில் அவருக்கெதிராக வேட்பாளரை நிறுத்தாமல் வெற்றிபெற வைத்தார் அண்ணா.
அதற்கு பதிலுபகாரமாக, 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கெதிராக பெரும்தனவந்தரான பஸ் ஓனர் நடேச முதலியாரை நிறுத்தினார்.
நாட்டிலேயே அதுவரை இல்லாத கூத்தாக முதன் முறையாக ஓட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கி நடேசனை ஜெயிக்க வைத்தார்.
இப்போது தெரிகிறதா, யார் யாரை பொய்களாலும் புரட்டுகளாலும் வீழ்த்தியது?
இந்தி எதிர்ப்பு போராளிகளை கக்கனும் பக்தவச்சலமும் சேர்ந்து காக்கா-குருவி சுடுவதைப்போலசுட்டுக்கொன்றது. அன்றைய எடப்பாடி தான் கக்கனும் பக்தவச்சலமும்.
மொழிவாரி மாநிலங்களின் பிரிவின்போது, தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கப்பட்டதாக மக்கள் கருதினர்.
தேசிய அரசியல் பார்வையில் இதை அணுகிய காமராஜர், தமிழ்நாடு மக்களின் கோரிக்கைகளை கிஞ்சித்தும் மதிக்கவில்லை.
இது போதாதென்று தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதால் என்ன வந்துவிடப்போகிறது என்று அண்ணாவை ஏளனம் செய்தார்.
1960களில் காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பஞ்சம் மெட்ராஸ் மாகாணத்தை பீடித்தது. அரிசி/தோசை/இட்லி என்பதெல்லாம் தீபாவளி பொங்கலுக்கு செய்யப்படும் லக்சுரி பொருளாக இருந்தது.
மக்காசோள மாவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று, வரிசையிலேயே கொத்துக்கொத்தாக செத்து மடிந்த காலம். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், மற்ற மாநிலங்களில் இருந்து உணவை கொண்டு வந்திருக்க முடியுமென்றாலும், எலிக்கறியை தின்னச்சொன்னார்.
1952ல் போட்டியிடாவிட்டாலும், நாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் வாக்குறுதிகளுடன் கூட்டணிக்கட்சிக்கு ஆதரவாக தேர்தலைச் சந்தித்த கட்சியான திமு கழகம், 'மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்' என்கிற கோஷத்துடன் 1967 தேர்தலைச் சந்தித்தது.
விளைவு, தனது சொந்த தொகுதி மக்களிடமே படுதோல்வியைச் சந்தித்தார் காமராஜர். அவரது தோல்விக்கு இன்னும் ஏக காரணங்கள் இருக்கின்றன, அவற்றுள் முதன்மையானவை இவை.
திமுக தனது முதல் தேர்தலில் 15 தொகுதிகளும், இரண்டாவது தேர்தலில் 50 தொகுதிகளும், மூன்றாவது தேர்தலில் 137 தொகுதிகளும் பெற்று ஆட்சியமைத்ததால் காங்கிரஸ் கட்சியே கலகலத்து போனது.
தேசிய நீரோட்ட அரசியலிலேயே மூழ்கி முங்கி முத்துக் குளித்துக் கொண்டிருந்த காமராஜருக்கு தமிழ்நாட்டில் அண்ணா பேசிய திராவிடத்தால், தனிநாடு கோரிக்கையால், அவர் நினைத்தபடி இந்தியை திணிக்க முடியாதததாலும் இடையறாது தொல்லை வந்துகொண்டிருந்தது.
மக்கள் திராவிடத்தின் பக்கம் திரும்புகின்றனர் என்ற பேச்சே அவருக்கு எரிச்சலைத் தந்தது. இதன் காரணமாகவே செல்வாக்குள்ள காங்கிரஸ் தலைவர்களை தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபடச்சொன்னார்.
இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என்கிற பிரிவினையேற்பட்டது. 1971 நாடாளுமன்றத் தேர்தலில் துடைத்தெறியப்பட்டார். இந்திரா பெருவெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
மூக்குபொடி படிந்து பழுப்பேறிய சட்டையும், இடுப்பில் சரியாக கட்டாமல் சொருகி வைத்த வேட்டியும், வியர்வையை துடைக்க தோளில் ஒரு துண்டுமாக வாழ்ந்து மறைந்த பேரறிஞர் அண்ணா வேறு 'எல்லோரையும்' விட எளிமையான தலைவர் தான்.
முதல்வராக அமெரிக்கா சென்றபோது இந்து என்.ராம் அங்கே படித்துக்கொண்டிருந்தார், அடுத்த நாள் காலை தனவந்தர்களுடன் தொழிலதிபர்களுடனும், படித்த மேதாவிகளுடனும் அவருக்கு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
என்.ராம் தயங்கியபடியே அண்ணாவை மருங்கி மருங்கி பார்த்துக்கொண்டிரந்தார்...
என்ன என்பது போல பார்வையாலே வினவிய அண்ணாவிடம், தயங்கியபடியே...
“தாடியை மழித்து வர முடியுமா? இங்கே எல்லோரும் அவ்வாறு தான் இருப்பார்கள்” என்று கூறு, '
“ஓ, இது வேறா?' என்று சிரித்தவாறு சரி என்றார்.
தனது தோற்றத்தையோ, ஆடையையோ சிறிதும் பொருட்படுத்தாமல் காலம் முழுவதும் தம்பிகளின் அரவணைப்பிலேயே வாழந்தார்.
காமராஜரை போல தனியார் கம்பெனி பரிசளித்த சாெகுசு வீட்டிலோ, அந்த காலத்திலேயே ஏசி இருந்தால் தான் இந்த கட்டை குளிரும் என்றோ, ஓயாமல் மார்ல்புரோ, 555 சிகரெட்டுகள் புகைத்து, மீன் குழம்பு இருந்தால் மட்டுமே உள்ளே போகும் என்றோ அடம் பிடித்தவர் அல்லர்.
ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பத்துடனும், இட்டுக்கட்டிய கதைகளுடன் எங்கள் தலைவர்களை ஓயாமல் காரில் ஏற்றி சுற்றி வர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
அவர்களது கொள்கைளே இங்கே தமிழ்நாட்டின் வீதிகளில் டாம்பீகமாக பவனிவருகின்றன. கொள்கையற்றவர்களுக்கு தான் எளிமை, தூய்மை, சர்ஃப் எக்ஸெல், உஜாலா போன்றவை.
அவர்களிடம் இல்லாதவைகளை இட்டுநிரப்பத் தேவைப்படுகின்றன.
யாருக்கும் உதவாத தனிமனித எளிமையை வைத்து மக்களுக்கு என்ன பயன்? கஞ்சி போட்டு முடமுடத்த கதராடை அணிவதாலோ, மேற்சட்டை அணிய மாட்டேன் என்று வெறும் அடையாள அரசியல் செய்வதாலோ மக்களுக்கு என்ன கிட்டியது?
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், என். ரங்கசாமிக்கு தான் காமராஜர் cosplay செய்ய உதவியிருக்கிறது, மக்களுக்கு இவற்றால் பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா?
நிலச்சுவான்தாரர்களாலும், பண்ணையக்காரர்களாலும், பஸ் ஓனர்களாலும் நிறைந்திருந்த காங்கிரஸ் பாமர மக்களின் இடுப்பில் கிடந்த துண்டை தோளில் ஏற்ற பாடுபட்டிருக்கிறதா?
போராட்டங்களில் விவசாயக் கூலிகளை சுட்டுக்காென்ற காங்கிரஸுக்குள் இருந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தாரா காமராஜர்?
Because, Kamarajar is the Congress, Congress is Kamarajar. They compliment each other. He just wanted to play to his god complex of being a King/Queen maker in the Delhi.
இவ்வளவுக்கு பிறகும் காமராஜர் இறந்த போது முழு அரசு மரியாதையும், விடுறையும் அளித்து, காமராஜர் மணிமண்டபம் அமைத்து, மிக முக்கிய கிழக்கு கடற்கரைச்சாலைக்கு அவரது பெயரை சூட்டியது மற்றும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு அவரது பெயரைச்சூட்ட கோரிக்கை வைத்தது கலைஞர்.
எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தி காமராஜரை கைது செய்யச்சொன்ன போது மறுத்தவர் கலைஞர்.
இந்திராவை எதிர்த்து 1971ல் வந்த ஸ்தாபன காங்கிரஸ், காமராஜர் மறைவுக்கு பிறகு 1977ல் இன்றைய பாஜகவின் தோற்றுவாயான ஜனசங்கத்துடன் ஐக்கியமாகி, கறைந்து மறைந்தது என்பது வரலாறு.
காங்கிரஸில் இருப்பவர்களின் கொள்கைப்பிடிப்பிற்கு இதுவே மிகச்சிறந்த சான்று.
சிலருக்கு தமிழ்நாட்டில் சிறந்த முதல்வர் என்றால், காமராஜர், பக்தவச்சலத்திற்கு பிறகு எம்ஜியாரும், அதற்கு பிறகு ஜெயலலிதாவும் வருவது ஏன் என்பதும், சுஜாதா போன்றோருக்கு காலச்சக்கரம் ராஜாஜியோடு நின்று பிறகு ஜெயலலிதா காலத்தில் மட்டும் சுழல ஆரம்பிக்கிறது ஏன் என்பதும் யாமறிவோம்.
ஆகவே நடுநிலைகளே, அந்த அரதப்பழைய காரை ஓரமாக நிப்பாட்டிட்டு, சற்று இளைப்பாறவும்.
https://www.facebook.com/share/p/1Jx72cxxrn/
https://www.facebook.com/share/p/1EpDgqbY92/
https://www.facebook.com/share/p/1ArfwHy4EN/
https://www.facebook.com/share/p/19U8iFNEe7/
https://www.facebook.com/share/p/1MJnDKeFpB/
https://www.facebook.com/share/p/1CFojuPo1S/