நெருக்கடி நிலைக் காலத்தில், முதலமைச்சராக இருந்த கலைஞரிடம், காமராஜரைக் கைது செய்து சிறையிலடைக்கச் சொன்னது இன்றைய காங்கிரஸ்தான். அன்று காமராஜர் பக்கம் நிற்காமல், இன்றைய காங்கிரஸ் பக்கம் நின்றவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பது காமெடி !
காமராஜர் தொடர் புகைப் பிரியர், அதுவும் அவர் பிடித்தது சுதேசி சிகரெட்டுகள் அல்ல. 555 என்ற ஃபாரின் சிகரெட்டுகள். அந்த காலத்திலேயே அதற்கு மாதச் செலவு பல்லாயிரம் இருக்கலாம் !
கக்கனும், பக்தவச்சலமும் சேர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சுட்டுக் கொன்ற 100 க்கும் மேற்பட்ட மாணவர்களின் படுகொலைகளை ஒருபோதும் காமராஜர் கண்டித்ததே இல்லை !
தமிழ்நாடு பெயர் வைக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் சங்கரலிங்கனார். அவரை தன் சீனியர் என்றும் பாராமல், தன் சாதி ஆள் என்றும் பாராமல், தன் ஊர்க்காரர் என்றும் பாராமல், தன் கட்சிக்காரர் என்றும் பாராமல், கல்விக்காக உணவளித்த வழக்கத்திற்கு தன் முன்னோடி என்றும் பாராமல், உண்மையான காந்தியவாதி என்றும் பாராமல், சக தமிழர் என்றும் பாராமல், தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றக் கோரி உண்ணாவிரதமிருந்து போராடிய அந்த அறப்போராளியை துடி துடிக்கச் சாகவிட்டவர் காமராஜர்.
சாகும் தருவாயில் சங்கரலிங்கனார் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் மெய் சிலிர்க்க வைக்கும்.
“என் பிணத்தின் மீது காங்கிரஸ் கொடியைப் போர்த்தக் கூடாது. என் சாவுக்கு காங்கிரசிலிருந்து யாரும் வரக் கூடாது. காங்கிரஸ் இனி மெல்ல அழியும். கர்வமிக்க காமராஜரும் அதனுடன் சேர்ந்து ஒழிவார் !”
சங்கரலிங்கனார் மறைவுக்குப் பின் அவர் மீது கம்யூனிஸ்ட் கொடி போர்த்தப்பட்டது. பொதுவுடமைத் தோழர்கள்தான் அவரை நல்லடக்கம் செய்தனர்.
சங்கரலிங்கனாரை உண்ணாவிரதப் பந்தலில் சந்தித்த அண்ணாவிடம், நீயாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவாயா என்று தழுதழுத்தபடி கேட்டார் சங்கரலிங்கனார்.
தான் இறந்துவிடுவோம், காமராஜரின் பிடிவாதம் அதைச் சாதிக்கும் எனக் கணித்தவருக்கு, திமுக ஒரு நாள் தமிழகத்தை ஆளும் என்று கணித்திருக்க முடியாதா என்ன ?
அதுதானே ஆயிற்று ?
சங்கரலிங்கனாரைக் கொன்ற பின்னரும் பத்து வருடங்கள் இங்கும் - அங்கும் ஆட்சியிலிருந்தது காமராஜர்தான். கிங் மேக்கர்.
ஆனால், தமிழ்நாடு என்று பெயரை மாற்றியது பேரறிஞர் அண்ணா. அதுவும் ஆட்சியில் அமர்ந்தவுடன் போட்ட முதல் கையெழுத்து.
சங்கரலிங்கனார் இறந்த மண்ணிலேயே காமராஜர் தோற்ற போது கூட அவருடைய ஆன்மா குளிர்ந்திருக்காது. அவருடைய ஆன்மா அண்ணாவால், திமுகவால்தான் குளிர்ந்திருக்கும். தமிழ்நாடு அரசு என்று மின்னொளியில் தகதகத்த அந்தப் பெயர் பலகையைக் கண்ட பின்னரே அமைதியுற்றிருக்கும் !
அப்புறம் அவருடையச் சாபம் முதலில் பலித்தது இங்கு.
2 G பொய் வழக்கில் திமுகவையே அழித்துவிடலாம் என்றெண்ணி, சங்கிகளுடன் கைகோர்த்து கலைஞர் சாபத்தையும் வாங்க, அடுத்து பலித்தது அங்கு!
சாபம், ஆன்மா, குளிர்ச்சி, மகிழ்ச்சி இதெல்லாம் சாமானியனுக்காக எழுதப்படுவது. பகுத்தறிவு இவைகளை ஏற்பதில்லை. ஆனால் காலம், இயற்கை நாம் விதைத்தையே விளைய வைக்கும் !
இன்றைய காங்கிரசாரால் மிகவும் மனமுடைந்துக் கிடந்த காமராஜரைத் தேற்றி பாதுகாப்பளித்தது கலைஞரின் திமுக அரசுதான். காட்டிக் கொடுக்க முயன்றவர்கள் யார்?
ஆமாம். இப்போது குமுறிக் கொண்டிருக்கும் இன்றைய காங்கிரசார்தான்.
புனிதங்களை உடைப்பது எம் தொழில்.
நீ சொன்னதெல்லாம் அவதூறு, அப்படி எதுவுமே காமராஜர் வாழ்க்கையில் நடந்ததில்லை எனத் தரவுகளுடன் மறுக்கும் உரிமை உனக்குண்டு.
ஆனால், எதையுமே சொல்லக்கூடாது, அவரொரு புனிதர் என நீ தூக்கிக் கொண்டு வந்தால், நாங்க ஏன் அதைக் கேக்கணும்ன்னேன் ?
https://www.facebook.com/share/p/1D8sBRoscX/