1969 பிப்ரவரி மாதம் 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். பஞ்சாயத்து ரேடியோ எங்கள் வீட்டில்தான் இருக்கும். பேட்டரியில் இயங்கக்கூடியது. ஒரு ஸ்பீக்கர் வேறு கட்டியிருப்பார்கள். அண்ணா மரணமும், அதைத் தொடர்ந்து சோக இசையும் ஒலிக்கத் தொடங்கியது.
ஊர் மந்தையில் பரபரப்பாகியது. அண்ணா படம் வைத்து அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், எல்லா ஊர்களிலும் பாடையில் ஒரு உருவ பொம்மையை வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. தண்ணீர் இருக்கும் ஓடைக் கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் நடைபெற்ற அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர் எண்ணிக்கை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. இன்றுவரை அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை.
அண்ணாவின் வாழ்க்கை முழுவதுமே பல அற்புதங்களால் நிறைந்தது. ஒரு சாமானியர் தனது சிந்தனையில் உருவாக்கிய ஒரு இயக்கம், தொடங்கிய 18 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்கள் மனங்களை வென்றது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநிலக் கட்சியாக உருவெடுத்தது முதல் அற்புதம். அவர் நிகழ்த்திய அற்புதங்களை தொடர்ந்து வாசிக்க உதயமுகம் வார இதழ் பிடிஎஃப் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்...