தந்தை பெரியாருக்கு திருமணம் ஆனபிறகும் அவரை அவருடைய தந்தை அடித்தார். பெரியார் கோபித்துக் கொண்டு ஊர் சுற்றினார். காசி வரை போய் திரும்பினார். ஆனால், அவர் அணிந்திருந்த நகைகளை பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்தார். கிட்டத்தட்ட ஒரு பிச்சாண்டியைப் போல ஞானத்தை தேடி அலைந்து திரும்பினார். அவருடைய இந்த பொறுப்புணர்வு தந்தையை மட்டுமின்றி ஊராரையும் அவர்மீது மதிப்பு கொள்ளச் செய்தது.
தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளிதான் பல தலைமுறைகளுக்கு பாதுகாப்பளிக்க உதவியது என்பது எனது கருத்து. தந்தை பெரியாரின் கொள்கைகளில் வேறுபட்டு அண்ணா அவரிடமிருந்து விலகவில்லை. காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும் என்ற அண்ணாவின் விருப்பத்தை பெரியார் தவறாக புரிந்துகொண்டார் என்பதே உண்மை.
நமது கொள்கைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு எதிராக போராடி ஏன் சிரமப்பட வேண்டும்? விடுதலை நமக்கு அதிகாரத்தை பெறும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. நாமே ஏன் ஆட்சியை அமைத்து நமது கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுக்கக்கூடாது என்பதே அண்ணா உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்தது.
பெரியார் புரிந்துகொள்ளாவிட்டாலும் அதுவே உண்மை, அது நிச்சயமாக சாத்தியமாகும் என்பதை நிரூபித்தார் அண்ணா. மகனை புரிந்து கொள்ளாத தந்தையாக பெரியார் இருந்தார். தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளையாக அண்ணா இருந்தார் என்பதே வரலாற்று உண்மை.
இருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலகட்டத்தை படித்தால் இந்த உண்மை இன்றைய தலைமுறைக்கு விளங்கும்.
முழுக்கட்டுரையையும் உதயமுகம் இரண்டாவது இதழையும் வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்...
https://drive.google.com/file/d/1mwlSuIQeY_hBJ8hHjMg_7Ub2JNnHVrVY/view?usp=sharing
