வீட்டிலேயே செய்யும் எளிய டயலிசிஸ் - ராதா மனோகர், கனடா

 

சிறுநீரகம் செயல் இழந்து விட்டால் டயாலிஸ் செய்யப்பட வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் 

மேற்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு எளிதான வழி, நமது நாடுகளில்  இன்னும் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை

peritoneal dialysis என்பது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் பெரிதாக வழக்கத்திற்கு வரவில்லை..

Hemodialysis என்று கூறப்படும் குருதி சுத்திகரிப்பு முறையே பயன்பாட்டில் இருக்கிறது. 

ஹீமோ டயாலிசிஸ் முறை என்பது  மிகவும் செலவான சிக்கலான முறையாகும் , மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய முறையும் ஆகும். 

ஆனால் பெரிடோனியால் டயாலிசிஸ் என்பது உண்மையில் மிகவும் சிக்கனமானதும் இலகுவானதுமாகும்.

பெரிடோனியால் டயாலிஸ் என்பது குருதியோடு தொடர்புடையது அல்ல.

சிறுநீரகத்தில் இருந்து கழிவு நீரை அகற்றி  தேவையான உரிய திரவத்தை சிறு குழாய் மூலம் உட்செலுத்தும் முறையாகும்.

உண்மையில் இது மிகவும் இலகுவான முறையாகும்  மிகவும் ஆரோக்கியமான முறையும் கூட 

பெரிடோனியால் டயாலிஸ் முறையில் பெரிய கார்ப்பரேட்டுக்களுக்கு அதிக இலாபம் கிடையாது 

பெரிய கருவிகளோ பயிற்சி பெற்றவர்களோ கூட தேவை இல்லை 

போதிய பயிற்சி பெற்ற பின்பு பயனாளிகள் தாங்களாகவே வீடுகளில் இதை செய்து கொள்ளலாம்.

இதில் கிருமி தொற்று ஏற்பட கூடிய சந்தர்ப்பங்கள் மிக அதிகமாக உள்ளது என்பதுதான் மிக முக்கியமான ஒரே ஒரு விடயமாகும்.

இதில் அகற்ற வேண்டிய நீரின் அளவு. உள்ளே செலுத்த வேண்டிய திரவத்தின் அளவு போன்றவை மருத்துவர்களால் மட்டுமே தீர்மானிக்க படவேண்டும்.

எனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தற்போது இதை வீட்டில் செய்கிறோம்.

பிற்சேர்க்கை : ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைங்கள் இந்த டயாலிசை செய்யவேண்டும் ஒரு தடவை செய்ய சுமார் முப்பது நிமிடங்கள் போதும் 

இரவில் ஒரு இயந்திரம் மூலம் இந்த டயாலிசை செய்யும் முறையும் உண்டு 

அந்த இயந்திரத்தின் டியூப்களை பொருத்தி விட்டு தூங்கலாம் 

அது இன்னும் இலகு முறை என்று எண்ணுகிறேன் 

சிறுநீரக நோயால் அவதிப்பட்டு நீங்கள் டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டும் என்பது மேலே உள்ள தலைப்பின் நோக்கம் அல்ல.

எதிர்பாராமல் துரதிருஷ்டவசமாக சிறுநீரகச் செயலிழப்பு என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படும் நிலையில், எளிய முறையில் ஆயுளை நீட்டிக்கும் மாற்று வழியைச் சொல்லவே “வீட்டிலேயே டயாலிஸிஸ்-ஆயுள் காக்கும் தோழன்’ என்ற அறைகூவல் விடப்பட்டுள்ளது.

சிறுநீரகங்கள் - முக்கியப் பணி என்ன?

விலாப்புறத்தில் அவரை விதை வடிவத்தில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. நாம் குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு குளியலறை, கழிவறை எவ்வளவு அவசியமோ, அது போன்று நம் உடலிலிருந்து வெளியாகும் புரதக் கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதே சிறுநீரகங்களின் முக்கியப் பணி ஆகும்.

ஒரு நிமிஷத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும் எத்தோபாட்டீன் ஹார்மோனை சிறுநீரகங்கள் உற்பத்தி செய்கின்றன.

இது தவிர ரத்த அழுத்தத்தை சமச்சீராக பராமப்பதும் சிறுநீரகங்களின் முக்கியப் பணியாகும். மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தியது போக உடலுக்குத் தேவைப்படும் சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், பாஸ்பரஸ், தண்ணீர் போன்றவற்றை சயான விகிதத்தில் சேமித்து வைக்க உதவுவதும் சிறுநீரகங்கள்தான்.

டயாலிஸிஸ் என்றால் என்ன?

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக பாதிக்கப்படுவோன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து வருவதால், சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளாவோன் எண்ணிக்கையும் கணிசமாக அதிகத்து வருகிறது.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, யூயா-கியாட்டினின்-பொட்டாசியம் போன்ற கழிவுகளை ரத்தத்திலிருந்து பித்து சிறுநீராக வெளியேற்றும் வேலையை செவ்வனே சிறுநீரகங்கள் செய்கின்றன.

இந்த வேலையை சிறுநீரகங்கள் செய்ய முடியாமல் போகும் நிலையில் நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு (End Stage Kidney Failure) ஏற்படுகிறது.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால், நோயாளிகள் உயிர் வாழ இரண்டு வழிகள் உள்ளன.

1. டயாலிஸிஸ்.

2. சிறுநீரக மாற்று சிகிச்சை.

இதில் டயாலிஸிஸ் சிகிச்சையே பெரும்பாலானோருக்கு கை கொடுக்கக் கூடியது.

சிறுநீரகங்கள் செய்யும் துப்புரவுப் பணியை, உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரக இயந்திரக் கருவியில் இருக்கும் செயற்கை சிறுநீரகச் சவ்வு வழியாக பித்தெடுத்து, ரத்தத்தைச் சுத்தம் செய்து மீண்டும் உடலுக்குள் செலுத்துவதே டயாலிஸிஸ் ஆகும்.

இரண்டு வகை டயாலிஸிஸ்:

ஹீமோ டயாலிஸிஸ், பெரிடோனியல் டயாலிஸிஸ் என இரண்டு வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

வீட்டில் உங்களது தாய் சல்லடையில் மாவு சலிப்பது போன்று, சிறுநீரக சவ்வுகள் ரத்தத்தை சலித்தெடுத்து, அசுத்தத்தை ரத்தத்திலிருந்து பித்து, ரத்தத்தை சுத்தம் செய்து மீண்டும் உடலுக்குள் திருப்பிச் செலுத்தும் இயந்திர சிகிச்சை முறைதான் “ஹீமோ டயாலிஸிஸ்’ ஆகும்.

வீட்டிலேயே டயாலிஸிஸ்: இயந்திரம் எதுவும் இன்றி, நோயாளியின் அடிவயிற்றுப் பகுதியை டயாலிஸிஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதுதான் “ஹோம் டயாலிஸிஸ்’ எனப்படும் (பெரிடோனியல் )வீட்டிலேயே செய்து கொள்ளும் டயாலிஸிஸ் சிகிச்சை ஆகும். இதை (சிகிறிஞி - சிஷீஸீtவீஸீuஷீus கினீதீuறீணீtஷீக்ஷீஹ் றிமீக்ஷீவீtஷீஸீமீணீறீ ஞிவீணீறீஹ்sவீs) என்றும் அழைக்கலாம்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு வீட்டிலேயே செய்து கொள்ளும் பெரிடோனியல் டயாலிஸிஸ் சிகிச்சை முறை வரப்பிரசாதமாகும். இனி, 

பெரிடோனியல் டயாலிஸிஸ் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

நம் வயிற்றுக்குள் இருக்கும் முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல் அனைத்தையும் சுற்றி பாதுகாப்பாக பெரிடனியம் எனப்படும் மெல்லிய சவ்வு சுற்றப்பட்டுள்ளது.

இந்த பெரிடோனியம் இடைவெளியைப் பயன்படுத்தி அதனுள்ளே ஒரு மெல்லிய குழாயைச் செலுத்தி, அதன் வழியாக பெரிடோனியல் திரவத்தை உள்ளே அனுப்பி வெளியே எடுப்பதைத்தான் பெரிடோனியல்  டயாலிஸிஸ் என்கிறோம்.

சிறுநீரகங்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட நோயாளி பெரிடோனியல் டயாலிஸிஸ் சிகிச்சையை வீட்டிலேயே தினமும் செய்து கொள்ள அடிவயிற்றுப் பகுதியில் செய்யப்படும் ஏற்பாடு என்ன?

அடிவயிற்றில் தொப்புளுக்குச் சற்று கீழே இடது புறம் ஒரு மெல்லிய சாவித் துவாரம் செய்து, அதன் வழியே பெரிடோனியல் கதீட்டர் குழாய் உள்ளே செலுத்தப்பட்டு, பின்னர் அதைச் சுற்றி தையல் போடப்படும். காயம் ஆறியவுடன், அதன் வழியே பெரிடோனியல் சுத்திகப்பு கலவை திரவம் உள்ளே செலுத்தப்படும்.

ஒவ்வொரு முறையும் சுமார் ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் திரவம் உள்ளே செலுத்தப்பட்டு சுமார் 4 மணி நேர இடைவெளிக்குப் பின் வெளியே எடுக்கப்படும்.

ஹீமோ டயாலிஸிஷஸக் காட்டிலும் பெரிடோனியல் டயாலிஸிஸ் சிறந்தது. ஏனெனில் ஹீமோ டயாலிஸிஸ் முறையில் அசுத்தங்களை செயற்கைச் சவ்வு வடிகட்டுவதால் வைட்டமின், புரதச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும்.

அதே சமயம், பெரிடோனியல் டயாலிஸிஸ் முறையில் இயற்கையாக அசுத்தங்கள் வடிகட்டப்படுவதால் வைட்டமின், புரதச் சத்து இழப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

மேலும் பெரிடோனியல் டயாலிஸிஸ் செய்து கொள்வோருக்கு உணவு விஷயத்திலும் கொஞ்சம் சலுகை கிடைக்கும். அதாவது, புரதச் சத்து உணவுகளை கொஞ்சம் அதிகமாகச் சாப்பிடலாம். குடிநீர் விஷயத்திலும் சலுகை கிடைக்கும்.

அதாவது ஹீமோ டயாலிஸிஸ் செய்து கொள்வோர் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் குடிநீர்தான் குடிக்கலாம் என்றால், வீட்டிலேயே பெரிடோனியல் டயாலிஸிஸ் செய்து கொள்வோர் நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் குடிநீர் குடிக்கலாம்.

பெரிடோனியல் டயாலிஸிஸ் முறையில் எப்போதும் டயாலிஸிஸ் நடந்து கொண்டிருப்பதே மேற்சொன்ன சலுகைகள் கிடைக்க முக்கியக் காரணமாகும்.

மேலும் ஹீமோ டயாலிஸிஸ் செய்து கொள்வதைப் போன்று வாரம் மூன்று நாள் மருத்துவமனைக்குச் சென்று பல மணி நேரங்களைத் தாரை வார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

- ராதா மனோகர், கனடா


Previous Post Next Post

نموذج الاتصال