நாம் வாழும் பூமி - அ.சோழராஜன்


பூமிப் பந்தின் அதிசயங்கள்

பூமியின் மொத்தப் பரப்பளவில் கடல்கள் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. பூமியின் மொத்த நீர் ஆதாரத்தில் 97 சதவீதம் கடல்களில் உள்ளது.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே திரவ வடிவில் நீர் இருக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன.

பூமியில் உள்ள கடல்கள்தான் உயிரினத்தின் தோற்றுவாய் என்கிறார்கள். இப்போதும் கடல்களில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன.

கடல்கள்தான் பூமியின் தட்பவெப்ப நிலையை தீர்மானிக்க உதவுகின்றன. சூரியனின் கதிரியக்கத்தை உள்வாங்கி வெப்ப நிலையை மிதப்படுத்துகின்றன. கடலில் உற்பத்தியாகும் மின் அலைகள் பூமி முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் நிலத்தையும் காற்றையும் உஷ்ணப்படுத்தவும், கோடைக் காலத்தில் இரண்டையும் குளிர்ச்சிப் படுத்தவும் இவை உதவுகின்றன.

பூமியில் உள்ள கடல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. 2000ம் ஆம் ஆண்டு வரை நான்கு அங்கீகரிக்கப்பட்ட பெருங்கடல்கள் இருந்தன.  அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் என்று அழைக்கப்பட்டன. 2000ம் ஆண்டின் வசந்த காலத்தில் கூடிய சர்வதேச மாநாட்டில் புதிய பெருங்கடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றியுள்ள கடலுக்கு தெற்கு பெருங்கடல் என்று பெயரிட்டது.

இந்த ஐந்து பெருங்கடல்கள் தவிர, ஏராளமான சிறிய கடல்களும் உள்ளன. இவற்றில் தெற்கு சீனக் கடலும், கரீபியன் கடலும், மத்தியத் தரைக் கடலும் மிகப் பெரியவை. இந்த புத்தகத்தில் இந்த கடல்களை பற்றிய விவரங்கள் உள்ளன. 

அடுத்ததாக கண்டங்களும் துணைக் கண்டங்களும் பற்றிய விவரங்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. 

கண்டங்கள் என்பவை எவை?

சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்ட, பிளவுபடாத தொடர்ச்சியான பரந்த நிலப்பரப்பு கண்டம் என்று அழைக்கப்படுகிறது. சில கண்டங்கள் நிலத்தட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவை, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா.

பசிபிக் பெருங்கடலில் உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டங்கள் ஓஸானியா என்று அழைக்கப்படுகின்றன.  இருந்தாலும், இவை ஒரு கண்டத்தின் எஞ்சிய பகுதிகள் என்பதை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.

புவியியல் உண்மைகளை புறக்கணித்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக ஒரு பகுதியை கண்டம் என்று அழைப்பதும் உண்டு. ஐரோப்பா என்பது ஆசியா கண்டம் அல்லது யுரேசியா கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள தீபகற்பமாகும். இருந்தாலும், யுரல் மலைத் தொடருக்கு மேற்கே உள்ள பகுதி முழுவதையும் ஐரோப்பா கண்டம் என்றே அழைக்கிறார்கள்.

இது போன்று பல உண்மைகளை இந்த நுால் உள்ளடக்கி இருக்கிறது. எல்லா தரப்பினர்களுக்கும் இதில் ஏராளமான விஷயங்கள் இருகின்றன. 

https://play.google.com/store/books/details?id=XGuBEAAAQBAJ


Previous Post Next Post

نموذج الاتصال