கணிதம், அறிவியல், கலை, கலாச்சாரம் என அத்தனை துறைகளிலும் 18 வயதுக்குள் நெப்போலியன் தெளிவு பெற்றான். அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான். யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது. மிகச் சிறிய வயதிலேயே, ராணுவத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டான். இருந்தாலும், அப்போது பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியைப் பயன்படுத்தி, தனது தாய்மண்ணை விடுவிக்கவே விரும்பினான். 20 வயதில், தனது தாய்மண் கோர்ஸிகா தீவின் மக்கள் அவன் பின்னே அணிவகுத்தனர். மாபெரும் தேசத்தின் புரட்சிக்கு நடுவே சத்தமில்லாமல் தனது தீவுக்கு விடுதலை பெற்றுத் தந்தான்.
Tags
சிபி பதிப்பகம்