ஒளிரும் தீபமாய் உன் நினைவுகள் - சகாய டர்சியூஸ்தமிழின் காவலன், அண்ணா நீ,

மேடைதோறும் புரட்சியாய் 

உன் சொற்கள் 

மக்கள் இதயம் கீற... 

உயிர்ப்பித்தாய் 

திராவிட இயக்கம் தனை...

கல்வியின் சொல்லாடல், 

உன் வார்த்தைகள்...

அறிவின் நெய்தல்

உன் மொழிகள்...

உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக 

விழித்தன தமிழரின் மனங்கள்...

மதராஸ் பெயர் மறைந்து 

தமிழ்நாடு உதித்தது 

உன் தீர்க்கமான முடிவால்....

உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக 

தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக...  

இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது தமிழ்நாடு... 

சமூக நீதியின் சங்கீதம் அண்ணா நீ,

மக்களின் குரலாய் முழங்கி நின்றாய்...

நாடாளுமன்றத்தை உலுக்கின 

உன் பேச்சுக்கள்... 

இந்திய அரசியலில் வழிகாட்டியாய்

இன்றும் நம் தமிழ்நாடு...

அறிஞர் அண்ணா 

தமிழர் உள்ளங்களில் 

ஒளிரும் தீபமாய் 

என்றுமே உன் நினைவுகள்...

இன்றும் வாழ்கின்றன 

உன் கனவுகள்... 

அண்ணாவின் நினைவு நாளான இன்று 

சமத்துவம், சமூக நீதி காத்திட உறுதியேற்போம்.

மாநில சுயாட்சி முழங்கி நிற்போம்

தமிழ் மொழியை மேலோங்க வைப்போம்,

அண்ணாவின் கனவுகளை நனவாக்குவோம்,

அவர் காட்டிய வழியில் நடைபோடுவோம்.


Previous Post Next Post

نموذج الاتصال