காலம் சிதைத்த கனவுகள் என,
வரலாறு கனிந்து கூறிடும்.
விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என,
வேதங்கள் மெல்லப் பாடிடும்.
ஆராய்ந்து பார்க்கையில்,
துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்!
உழைப்பின் சுரண்டல்கள் கண்டு
முறித்துவிடாதே உன் மனதை,
உன் திறமை உன்னை வழிநடத்தும்.
ஏமாற்றத்தின் நிழல் கண்டு
முடக்கிவிடாதே திறமையை,
காலத்தின் கற்பிதம் மனதில் கொள்!
தடைகள் சூழ நின்றாலும்
கண்ணீரின் ஆழத்தை கடந்து செல்,
கனவுகள் மெய்ப்படும்.
துரோகத்தின் வலிகள்
மனதின் வலிமைகளாய் மாறும்,
தன்னம்பிக்கை காதலில் நீ விழு!
வாழ்க்கையின் சவால்கள் எதிர்கொள்
பாதை முள் நிறைந்து இருள் சூழ்ந்தாலும்,
உழைப்பும் துணிவும் கொண்டு ஒளியேற்று.
எதிர்பார்ப்புகளை சிறைப்படுத்தி,
தோல்விகளை மீறி நீ செல்,
உனக்கு நீயே தான் வழிகாட்டி!
வாழ்வின் அர்த்தம் இதுவே
விழிநீரால் அமைந்த பாலம்,
ஒவ்வொரு கற்களும் ஒரு பாடம்.
காயங்கள் நம் வலிமையின் முத்திரைகள்,
வெற்றியின் வெளிச்சத்தின் திறவுகோல்கள்.
வீழ்வது வாழ்க்கையின் முடிவல்ல,
மீண்டும் எழுவதே வாழ்வின் அழகு!
- சகாய டர்சியூஸ் பீ