Monthly Archives: September, 2022

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 5 – விந்தன்

5. காந்தியார் மேல் வந்த கோபம் “எங்க கம்பெனி அப்போ மாயவரத்திலே முகாம் போட்டிருந்தது. காந்தியார் வந்தார்…. “அப்போது நீங்களும் காங்கிரஸ்காரரா யிருந்தீர்களா? “இல்லே; ஆனா .அதுக்காக எனக்குத் தேசபக்தி இல்லேன்னு நெனைச்சுடாதீங்க… வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து இந்தியா விடுதலையடையறகுக்கு அப்போ காந்தி காட்டிய வழியைவிட பகத் சிங் காட்டிய வழிதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதர்லே அவர் கோஷ்டியிலே நான் இருந்தேன். அண்ணன் சாரங்கபாணி மட்டும் அன்னிக்கும் காந்தி பக்தர்தான்; இன்னிக்கும் பக்தர் தான். அவரும் நானும் காந்தியாரைப்…

சிந்தனைக் களம் – 5 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

மனிதர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பண்புடன் பேசுவதில் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணமடைந்ததும் அவரை கேவலப்படுத்தி பேசுவது அழகற்ற செயலாகும். இடம், நேரம், காலம் உணர்ந்து பேசுவது அழகு. அதுவே தமிழர் பண்பாடு அல்லவா! அப்போது நாம் தமிழர் என்று புகழ்பாடுவது வார்த்தைகளால் மட்டும்தானா? சிந்திக்க வேண்டும்! இறந்த மனிதரை பற்றி பேசுபவர்கள் நான் சரியாக நடக்கிறேனா, என் மரணத்தின் போது என்ன பேசுவார்கள் என சிந்தித்ததுண்டா? அதுவும் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்து வசதிகளை அனுபவித்தபடி, ஊருக்கு சென்று…

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை – அரசு அறிவிப்பு

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில்…

போரும் அமைதியும் – Fazil Freeman Ali

இம்முறை போல‌ந்து ச‌ற்று வித்தியாச‌மான‌, கொந்த‌ளிப்பான‌ ம‌ன‌நிலையில் இருப்ப‌து தெளிவாக‌ தெரிகிற‌து. சுவ‌ரெங்கும் ர‌ஷ்யாவுக்கு எதிரான‌, புடினுக்கு எதிரான‌ வாச‌க‌ங்க‌ள் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஹிட்ல‌ரோடு ஒப்பிட்டு புட்டினை வ‌சைபாடும் சுவ‌ரொட்டிக‌ள் ந‌க‌ர்முழுக்க‌ நிறைந்திருக்கின்ற‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் ஹிட்ல‌ரும், புடினும், ஸ்டாலினும் வில்ல‌ன்க‌ளாக‌ வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். சாதார‌ண‌ தேனீர்க‌டைக‌ளில்கூட‌ பேச்சில் ர‌ஷ்ய‌ வெறுப்பு கொப்ப‌ளிக்கிற‌து. செப்ட‌ம்ப‌ர் 1939-ல் சோவிய‌த் போல‌ந்தை ஆக்கிர‌மித்த‌லிருந்தே இந்த‌ வெறுப்பு துவ‌ங்கியிருந்தாலும், இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது போல‌ந்து வ‌ழியாக‌ சோவிய‌த் ப‌டைக‌ள் ஹிட்ல‌ரை வீழ்த்த‌ சென்ற‌போது த‌ம் கோப‌த்தையும்மீறி…

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 9 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

பிரதமர் ராஜீவ் காந்தி இயக்கங்களை சந்திக்க விரும்பினார் நாடு கடத்தல் உத்தரவு: இதைத் தொடர்ந்து போராளி இயக்கங்களின் தலைவர்களைப் பிரதமர் ராஜீவ் காந்தி பார்க்க விரும்பினார். அவர்கள் செல்லத் தயங்கினர். இந்திய அரசுக்கும், சில இயக்கங்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டது. போராளி இயக்கங்களோடு தொடர்புடைய மூன்று தலைவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டனர். அந்த செய்தி டெல்லியில் எனக்குக் கிடைத்தவுடன் திரு. பார்த்தசாரதியோடும் திரு. ரொமேஷ்பண்டாரியோடும் தொடர்பு கொண்டும் நாடு கடத்தலை நிறுத்துமாறு வேண்டினேன். தமிழ் நாட்டு…

விந்தன் சிறுகதைகள் – 7

சுயநலம் வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி, மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்! காலையில் எழுந்ததும் வேலப்பன் கடை வீதிக்குச் சென்று சில தேக்குமரத் துண்டுகளையும், பிரம்புக் கத்தைகளையும் வாங்கி வருவான். தேக்குமரத் துண்டுகளை அறுத்து, இழைத்து ‘கூர்’ வாங்கி கட்டில்களாகச் செப்பனிடுவது வேலப்பனின் வேலை. பிரம்புகளை யெல்லாம் பிளந்து கட்டில்களுக்குப் ‘படுக்கை’ பின்னி விடுவது வேலப்பனின் மனைவியான…

வாழ்வியல் சிந்தனைகள் – 26 – ராதா மனோகர்

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள்! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும். அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ…

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 4 – விந்தன்

4. என்.எஸ்.கிருஷ்ணனின் சபதம் “கே.பி.கேசவன், காளி என். ரத்தினம் கூட ஜகந்நாதய்யர் கம்பெனியில்தான் இருந்தார்களா?” “இல்லை, அவங்க இருந்தது ஒரிஜினல் பாய்ஸ் அதிலேதான் பி.யு.சின்னப்பா, கம்பெனியிலே. எம்.ஜி.ராமச்சந்திரன் கூட இருந்தாங்க. நானும் ஒரு சமயம் அங்கே இருந்தேன். அந்தக் கதையை அப்புறம் சொல்றேன்.” “ஜகந்நாதய்யர் கம்பெனிக்கும் ‘ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’ என்ற பெயர் உண்டா?” “கிடையாது; ஜகந்நாதய்யர் கம்பெனியின் முழுப் பெயர் ‘மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபா’ என்பது. ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின்…

சிந்தனைக் களம் – 4 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

என் வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு படிப்பினையாகட்டும். திருந்துபவர்கள் திருந்தட்டும். உணர விரும்புபவர்கள் உணரட்டும். எனது மடமையினால் நான் பட்ட கஷ்டத்தை யாரும்படக் கூடாது என்பதே என் எழுத்தின் நோக்கம். எனது கஷ்டங்கள் என்னால் உருவானவை. எனது கஷ்டங்களுக்கும் வலி வேதனைகளுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். காரணம் என் பக்கத் தவறுகள் என்னவென்று தெரிந்தால்தான் மீண்டும் அப்படியான சந்தர்ப்பத்தை உருவாக விடாமல் தடுக்கலாம். அதனால்தான் இன்று நிம்மதியாக வாழ்கிறேன். பல சகாப்தங்களுக்கு முன்பு -இல்லை என கூறத் தெரியாது.…

பாஜக மாதிரியா திமுக? – Ravishankar Ayyakkannu

யாரோ ஒரு BJP ஆசாமி பேட்டி கொடுத்த நினைவு. “மோடி வெற்றி பெற்றால் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம் என்றீர்களே! அது என்ன ஆச்சு?” என்று நிருபர் கேட்கிறார். “நாங்கள் எங்கு ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று நினைத்து இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். அய்யோ பாவம், நீங்கள் அதை எல்லாம் நம்பிவிட்டீர்கள். பிம்பிலிக்கி பிலாப்பி” என்று பாஜக ஆசாமி கூலாகப் பதில் சொன்னார். “சொன்னதைச் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம்” என்பது திமுகவின் தாரக…

கலைஞர் போட்ட அரசாணையை நிறைவேற்ற மறுக்கிறாரா மா.சுப்பிரமணியன்? – A Sivakumar

1. 2009-ல் அது எப்படி பீகாரை விட நமது அரசு மருத்துவர்கள் குறைவாக சம்பளம் வாங்கலாம் என்று வெளிப்படையாக அன்றைய முதல்வர் கலைஞர் கேட்டாரா இல்லையா? 2. அதன் பின் நடந்த பல்வேறு விவாதங்கள் மற்றும் Committee ஆய்வுகளுக்கு பின்பு தன்னுடைய ஆட்சிக்காலத்திலேயே அரசாணை 354 என்பதை அரசு மருத்துவர்களுக்கு தலைவர் கலைஞர் தந்தாரா இல்லையா? 3. அதன் பின் அந்த அரசாணை 354, முழுமையாக நடைமுறைக்கு வரவேண்டும் என்று கடந்த 13 வருடங்களாக அரசு மருத்துவர்கள்…

இந்திய-கொரிய தொழில் ஒத்துழைப்பு வரலாற்றில் கலைஞரின் பங்களிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தென்கொரியாவில் மோற்கொள்ளப்படும் தொழிற்சந்திப்புகள் நிமித்தம் தமிழ்நாடு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தற்பொழுது தென் கொரிய தலைநகர் சியோலுக்கு வருகை தந்துள்ளார். அவர் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ் மக்களை சந்தித்தார். இங்குள்ள நம் மக்களின் நிலை, தொழில், தமிழ்-கொரிய பண்பாட்டு தொடர்பு, கொரியாவின் தொழில் வளர்ச்சி, மற்றும் தமிழ்…

1 2 3 15