லூயி பாஸ்டர் - ஆதனூர் சோழன்

 


வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்...

* 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார். நோய்க்கான காரணங்கள் மற்றும் அதற்கான தடுப்பு வழிகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பிரபலமானவை.

* பால், கள் ஆகியவை ஏன் புளிக்கின்றன என்பதை கண்டுபிடித் தார். பால் உள்ளிட்ட திரவங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகின்றன. அவற்றில் உள்ள பாக்டீரிக்காளால் மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர் என்று அறிவித்தார். நோய்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தார். 

பால் புளிக்காமல் இருப்பதற்கு அதை சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கும் என்றார். 

இந்த முறைக்கு பாஸ்ச்சுரைசேஷன் என்று பெயர். உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுவை மாறாத வகையில், நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்லும் வகையில் பதப்படுத்தப்படும்.

* பெரும்பாலான நோய்களுக்கு நுண்ணுயிர்களே காரணம் என்ற, நோயின் மூலம் குறித்த விதிகளுக்கு ஆதரவாகவே லூயி பாஸ்டரின் பெரும்பாலான ஆய்வுகள் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் நோய்கள் தனியாக உருவாவதாக மக்கள் நம்பினார்கள். பாஸ்டர் உள்ளிட்டோரின் ஆய்வுகள் மூலம் இது மாற்றப்பட்டது.

* பாஸ்டரின் ஆய்வுகள், வேதியியல் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தன. சில பளிங்குகள் மாறுபட்ட கோணத்தில் இருப்பதற்கு மூலக்கூறுகளே காரணம் என்பதைக் கண்டறிந்தார். டார்டாரிக் அமிலத்தின் இயற்கைத் தன்மைகளை கண்டுபிடித்தார். ஸ்டிராஸ்பூர்க் பல்கலைக் கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றினார்.

* சிக்கன் காலரா மற்றும் மற்ற நோய்களை ஆய்வுசெய்து நோய் எதிர்ப்பு முறை மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்து பாஸ்டர் அறிந்துகொண்டார். வெறிநாய்க் கடிக்கு முதல்முறையாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவினார். இதன்மூலம், 1885 ஆம் ஆண்டு சிறுவன் ஒருவன் வெறிநாய்க் கடியிலிருந்து காப்பாற்றப்பட்டான். இந்த சிகிச்சையைப் பெற்ற முதல் நபர் அந்த சிறுவன்தான்.

* அவரது பணியையும், பங்களிப்பையும் பாராட்டி பிரான்ஸ் அரசு கிராண்ட் கிராய்க்ஸ் ஆப் தி லெஜன் ஆப் ஹானர் என்ற கவுரவத்தை வழங்கியது.

* பாஸ்டரின் கருத்துக்களில் முக்கியமானவை, 

“அறிவியலுக்கு நாடு தெரியாது. ஏனெனில் அறிவு மனிதனுக்குரியது. இதன் வெளிச்சம் உலகம் முழுவதும் பரவக் கூடியது”

* நான் மர்மங்களின் எல்லையில் இருந்ததால், திரை மிகவும் லேசாக மாறிவிட்டது.

* “அறிவியலும் அமைதியும், அறியாமையையும் யுத்தத்தையும் வெற்றிகொள்ளும் என்று நம்புகிறேன். அழிக்கக் கூடாது என்று நாடுகள் ஒன்றுசேர்ந்து முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மனித இனத்துக்காக பணியாற்றுபவர்களுக்கு எதிர்காலம் சொந்தமாக இருக்கும்.”

* “பாதிக்கப்பட்ட ஒருவரிடம் நீ எந்த நாடு, எந்த மதம் என்று கேட்கக் கூடாது. மாறாக, நீ பாதிக்கப்பட்டிருக்கிறாய், எனக்கு அது போதும் என்று கூறினால் போதுமானது.” 


Previous Post Next Post

نموذج الاتصال