உலகம் வாழ உணவைத் தந்தவன் - சகாய டர்சியூஸ்
திருநாளாம் அய்யா இது திருநாளாம் 

உழைப்பிற்கு  நன்றி சொல்லும்

தமிழரின் பெருநாளாம்


சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா 

மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா  

பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா

மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா


களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா 

கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா 

மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா

மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா


விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா

விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா 

பசுமை போர்வையில் படரும் நிலமேயய்யா 

பார்போற்றும் உழவனின் பெருமை தெரியுதேயய்யா 


உழுது உழுது உணவைதானய்யா 

உலகம் வாழ தந்தவான்தானய்யா

உழைப்பின் பெருமை போற்றும் நாளிலேயய்யா

உலகை ஊட்டும் உயிர்வாழ் கலையை போற்றுவோமேயய்யா 


அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்!

- சகாய டர்சியூஸ் பீ, தென் கொரியா

Previous Post Next Post

نموذج الاتصال