கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்?

உலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம்.

ஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும்? 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள் கூறினாலும் அது என்னவாக இருக்கும் என்பதை தெரியாமல் இருந்தது. ஆனால், அது கடலுக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். அந்த குமிழ்கள் சுமார 500 மீட்டர் அளவுக்கு குறுக்களவு கொண்டதாக இருக்கும் என்றும், அந்தக் குமிழ் வெடித்தால் பத்தாயிரக்கணக்கான அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகும் என்றும் புவியியலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال