கலியோ சில உண்மைகள் - ஆதனூர் சோழன்



கலிலியோ கலிலி இத்தாலிய விஞ்ஞானி. நமது சூரிய குடும்பத்தின் அமைப்பு, வானசாஸ்திரம் ஆகியவை குறித்து புதிய விஷயங்களை கண்டுபிடித்து அறிவித்தவர். அவருடைய கண்டுபிடிப்புகள்தான் புதிய சிந்தனையை உருவாக்கின. அவரைப் பற்றிய மிகவும் முக்கியமான சில உண்மைத் தகவல்களைப் பார்க்கலாம்....


 * இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கலிலியோ பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார்.


* வானவியல் அறிஞர், வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.


* பிசாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அதனை முடிக்காமல், கணிதத்தை தேர்வு செய்து படித்தார். 


*இந்த தொலைநோக்கி மூலம், அதற்கு முன் வானியலாளர்கள் வானில் கண்டதைவிட நீண்ட தொலைவுக்கு அப்பாலும் கலிலியோவால் காண முடிந்தது. 1610 ஆம் ஆண்டு, வியாழன் கிரகத்தைச் 4 பொருட்கள் சுற்றுவதைக் கண்டுபிடித்தார். இவை, வியாழனின் மிகப்பெரிய நிலவுகளாகும். லோ, கலிஸ்டோ, ஈரோப்பா, கனிமீடு என்று இவை அழைக்கப்படுகின்றன. 


*  பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, கோபர் நிகோலஸ், ஜோகன்னஸ் கெப்லர் ஆகியோரின் ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் வைத்தது என்று கூறுகிறார்கள். அவரை கல்லால் அடித்து தீயில் போட்டதாக முன்பு கூறப்பட்டது.


* பூமியில் கடல் அலைகள் உருவாவதற்கு நிலவுதான் காரணம் என்ற கெப்லரின் கோட்பாட்டை ஏற்க கலிலியோ மறுத்தார். மாறாக, பூமியின் சுழற்சியால் இயற்கையாகவே அலைகள் உருவாவதாக நம்பினார். (இது தலைசிறந்த மனிதர்களும் தவறு செய்வார்கள் என்பதை உறுதிசெய்ய உதவியது).


* கலிலியோவின் பிரபலமான கருத்துக்கள் 


* “அறிவியல் கேள்விகளுக்கு ஆயிரம் பேர் சேர்ந்து அளிக்கும் பதில்கள் அதிகாரபூர்வமானவை அல்ல. மாறாக ஆதாரங்களுடன் தகுந்த காரணங்களுடன் ஒருவர் அளிக்கும் பதில் மட்டுமே உண்மையானது.”


* “உண்மையின் சக்தியை இப்போது உணருங்கள்: ஆய்வின் ஆரம்பகட்டத்தில் ஒரு விஷயம் தோன்றும். மீண்டும் மீண்டும் கவனமாக ஆய்வை மேற்கொள்ளும்போது, அதில் மாறுபட்ட கருத்துகள் உருவாகும்.”



Previous Post Next Post

نموذج الاتصال