பாஜகவின் ஊழல்களும் மோடியின் பொய்களும் - 1 - ஆதனூா்சோழன்


குஜராத்தில் அதானி நில அபகரிப்பு ஊழல்! ADANI LAND SCAM (GUJARAT)

குஜராத் அரசாங்கத்துக்கு சொந்தமான 14 ஆயிரத்து 305 ஏக்கர் நிலம் அதானி குழுமத்துக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. முந்த்ரா மற்றும் செஸ் வளர்ச்சித் திட்டத்துக்காக கட்ச் பகுதியில் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தின் விலை எவ்வளவு தெரியுமா? சதுர மீட்டருக்கு 1 ரூபாய் முதல் 32 ரூபாய்தான். என்னே ஒரு தாராளம்!செல்லாத நோட்டு மாற்றிய ஊழல்! ADCB SCAM

மோடி பணமதிப்பிழப்பு செய்து அறிவித்த பிறகு சாதாரண மக்கள் ஆயிரம் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன் மயங்கிக்கிடந்த சமத்தில், அமித் ஷா டைரக்டராக இருந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மட்டும் ஐந்து நாட்களில் 745 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கிறது. ஐந்து நாட்கள் கழிந்ததும், கூட்டுறவு வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று நாடுமுழுவதும் அறிவிப்பு வந்தது. அதாவது, அதானி காரியம் முடிஞ்சது அல்லவா?


Previous Post Next Post

نموذج الاتصال