கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப.வுக்கு "உலகின் தமிழன்" விருது

 


அக்டோபர் 29 2023 ஞாயிறு - தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதமிழ் கலை-இலக்கிய சந்திப்பு - கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ..ப அவர்களுக்கு "உலகின் தமிழன்"  விருது வழங்கப்பட்டது.

அறிஞர்களாக  தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர்.


தடம்
பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க தமிழ்த்தொண்டராக, தன் வாழ்க்கைப்பாதையில் சென்ற இடமெல்லாம் தமிழ் உலகிற்கு தமிழர் தந்த கொடைகளான இலக்கியங்களை, மதிப்புறு கூறுகளை, தத்துவங்களை, பண்பாட்டை கொண்டு செல்ல பணியாற்றுவோரில் குற்பிடத்ததக்கவர் பணி நிறைவு பெற்ற மிக மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி  கோ. பாலச்சந்திரன் அவர்கள்.

பல தமிழ்ச் சங்கங்ளுக்கு இன்றளவும் தலைவராகவும் ஆலோசகராவும் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல், உலகில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் (ஃகார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட) உயர்நிலைக்  கற்றல் மற்றும் ஆய்வு நோக்கிய பணிகளுக்கு புரவலராக இருந்து வருகிறார்.

தமிழரோ/பிறரோ, நடந்த வரலாறோ/நிகழ்கால சான்ற! யாராக இருந்தாலும் படைகொண்டு  வெற்றிகொண்டவன் பார்வையிலிருந்து மட்டும் வரலாற்றை பார்க்கமால், போரில் ஏற்படும் மக்கள் இழப்பு, போர் தொடுத்த மன்னவன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, ஆட்சிப்பணி குறைகள், நிகழ்ந்த வரலாற்று குழப்பம்/தவறுகள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து அறிவு வெளிச்சம் பாய்ச்சும் தமிழ்ப்பகலவனாக அவர் செயலாற்றுவதை தமிழ்கூறும் நல்லுலகு நன்கு அறியும்.மக்களாட்சியில் பெரும் நம்பிக்கைகொண்ட  கோ. பாலச்சந்திரன் அவர்கள், ஆட்சிப்பணியை பின்னாளில் இருந்து ஒருங்கிணைத்து செயலாற்றும் கருவியான அதிகார கட்டமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளின் வழிக்காட்டல்களை/கோரிக்கைகளை உரிய மதிப்புடன் கையாண்டு செயலாற்றுவதே மக்களாட்சி மேலும் நிலைபெற வழிவகுக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் என்பது காலத்தே நினைகூறத்தக்கது.

கோ. பாலச்சந்திரன் அவர்களின்  இத்தகைய செயல்பாடுகளையும், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் பயணிக்கும் உயரிய பன்பையும் பாராட்டி அங்கீகரித்து "உலகின் தமிழன்" என்கிற விருதை அவருக்கு கொடுத்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைகிறது கொரிய தமிழ்ச் சங்கம்.

Previous Post Next Post

نموذج الاتصال