விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 1 - ஆதனூர் சோழன்அபுல்கலாம் ஆசாத் 

(நவம்பர் 17, 1888-பிப்ரவரி 22, 1958)

அபுல்கலாம் ஆசாத் 1888 நவம்பர் 17ம் தேதி மெக்காவில் பிறந்தார். அவரது இயற்பெயர் அகமது என்பதாகும். ஆனால் அவரது தந்தை, பெரோஸ் பக்த் என்றே அபுல் கலாமை அழைத்தார். படிப்பில் சிறந்த மாணவரான அபுல்கலாம் ஆசாத், தனது 12வது வயதிலேயே அரபு மொழியிலும், பார்சி மற்றம் உருது மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். 1905ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக எகிப்தில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.

இஸ்லாமிய சமூக மக்களை காங்கிரஸ் கட்சி வட்டாரத்திற்குள் கொண்டு வருவதற்காக அல்-ஹிலால் மற்றும் அல்-பஜாஜ் ஆகிய பத்திரிகைகளை அபுல் கலாம் துவக்கினார்.

1920ஆம் ஆண்டில் ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று 1921ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.  அறிவுகூர்மை மிகுந்த தலைவராக மட்டுமின்றி தொலைதூரக் கண்ணோட்டம் கொண்டவராகவும் திகழ்ந்தார். எனவே, பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் காந்தி, ஆசாத்துடன் ஆலோசனை நடத்தினார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். 1945ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபிறகு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 6 ஆண்டுகாலம் அந்த பதவியினை வகித்தார். நாடு விடுதலை அடைந்தபிறகு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1958 பிப்ரவரி 22ஆம் தேதி ஆசாத் மறைந்தார்.


Abul kalam Azad was born on November 17, 1888 in Mecca. His childhood name was Ahmed but his father called him “Firoz Bakht’. Azad was a very brilliant student. At the age of 12,  he became a master in Arabic, Persian and Urdu language. In 1905, he went to Egypt for higher education from  Al-Azhar University.

Abul Kalam Started ‘Al Hilal’ and ‘Al Bajaj’ magazines to bring the Muslim community into the Congress fold.

In 1920, Azad joined the Congress Party. He participated in the ‘Non-cooperation Movement’ and was arrested in 1921. Azad was a very intelligent and foresighted person. Therefore, Gandhi often consulted Azad on important matters. In 1942, he was again arrested for participating in the ‘Quit India Movement’. After being released from jail in 1945, he was elected as the President of Indian National Congress and held this post for six years. After the Independence of India, he became India’s first Education Minister. Azad left this world on February 22, 1958.

Previous Post Next Post

نموذج الاتصال